உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புகுந்த வீட்டில் புகுந்து மகளை பலவந்தமாக தூக்கிய குடும்பம் girl abduct| telangana Crime| parents abd

புகுந்த வீட்டில் புகுந்து மகளை பலவந்தமாக தூக்கிய குடும்பம் girl abduct| telangana Crime| parents abd

ெலங்கானாவின் மேட்சல் மல்கஜ்கிரி மாவட்டம் நர்சம்பள்ளியை சேர்ந்த பிரவீன், ஸ்வேதா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் அவர்களின் காதலை ஏற்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய ஸ்வேதா, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன் பிரவீனை கரம்பிடித்தார். 4 மாதங்களுக்கு முன்பு அவர்களின் திருமணம் நடந்தது. ஸ்வேதாவின் காதல் திருமணத்தை அவரது பெற்றோர் விரும்பவில்லை. மகளை எப்படியாவது பிரவீனிடம் இருந்து பிரித்துவிட நினைத்தனர். நைசாக பேசி அவள் மனதை மாற்ற முயற்சித்தனர். அது நடக்கவில்லை. இனியும் புகுந்த வீட்டில் மகள் இருக்க கூடாது; கடத்தி செல்வது என்று திட்டமிட்டனர். ஸ்வேதாவின் பெற்றோர் பால நரசிம்ம- மகேஸ்வரி, தம்பி சாய், மாமா மோகன் உள்ளிட்ட சிலர் பிரவீன் வீட்டுக்கு காரில் சென்றனர். அதிரடியாக உள்ளே நுழைந்து ஸ்வேதாவை பலவந்தமாக இழுத்து வந்தனர். தடுக்க முயன்ற பிரவீன் மற்றும் அவரது தாயார் உள்ளிட்டோர் மீது மிளகாய் பொடியை வீசி, நிலைகுலைய செய்தனர். தடியால் தாக்கினர். கத்தி கதறிய மகளை தரதரவென இழுத்து சென்றும், குண்டுகட்டாக தூக்கி சென்றும் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்க்க, சினிமா கடத்தல் காட்சியை போல் நடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிரவீன் அளித்த புகாரையடுத்து, பெண்ணை கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். #ParentsAbductDaughter TelanganaCrime #GirlKidnapped #FamilyKidnapGirl

செப் 25, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Matt P
செப் 26, 2025 12:08

சமுதாயம் இவர்களை தனித்து விட்டு விடும் என்ற சுயநலத்துக்காக, சமுதாயம் விட்டு திருமணம் நடந்தத ற்க்காக மகளின் வாழ்க்கை என்றும் பாராமல். இவர்களின் வாழ்க்கையும் இனிமேல் இப்படி அவரசரப்பட்டதற்காக எப்படியும் ஆகி விடுமோ என்ற நினைப்பும் இல்லாமல் இப்படி செய்திருப்பது மகளின் வாழ்க்கையை மட்டுமல்ல இவர்கள் சீரழித்திருப்பது மொத்த குடும்பத்தின் வாழ்க்கையையும் தான் என்பது போக போக தான் தெரியும். சட்டத்தால் தண்டிக்கப்படுவது மட்டுமல்ல காலாகாலத்துக்கும் இவர்கள் அவ்வப்போது செத்து தான் ஆக வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை