உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பவன் படத்தால் கலவரக்காடான தியேட்டர்-பகீர் காட்சி pawan kalyan hari hara veera mallu | machilipatnam

பவன் படத்தால் கலவரக்காடான தியேட்டர்-பகீர் காட்சி pawan kalyan hari hara veera mallu | machilipatnam

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீர மல்லு படம் இன்று ரிலீஸ் ஆனது. பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வெளியானது. குறிப்பாக, அவர் துணை முதல்வர் ஆன பிறகு வெளியான முதல் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். பிரீமியர் ஷோவில் கூட்டம் முண்டியடித்தது. மச்சிலிப்பட்டினத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் புகுந்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசாராலும், தியேட்டர் ஊழியர்களாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நுழைவு பகுதியில் இருந்த கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. படம் பார்க்க நடந்த போட்டியில் ரசிகர்களுக்குள் மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கினர். நிலைமை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பதற்றம் தொற்றியது.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ