உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிதி நிறுவனத்தை பூட்டி ஊழியர்களை சிறை வைத்த கஸ்டமர் | Perambalur | private bank | Loan

நிதி நிறுவனத்தை பூட்டி ஊழியர்களை சிறை வைத்த கஸ்டமர் | Perambalur | private bank | Loan

சிஸ்டம் எரரால் ஓவர் டியூவ் கடுப்பான கஸ்டமர் கதவை இழுத்து பூட்டியதால் ஊழியர்கள் சரண்டர் பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். பெரம்பலூர் தனியார் வங்கி நிதி நிறுவனத்தில் ஏழு மாதத்திற்கு முன் லோன் பெற்று ஆனந்தன் பைக் வாங்கி உள்ளார். 94 ஆயிரத்து 950 ரூபாய் கடனுக்கு மாதம் 9 ஆயிரத்து 635 ரூபாய் தவணையை கட்டி வந்துள்ளார். இந்த சூழலில் செக் பவுன்ஸ் ஆகியதாக கூறி 1,030 ரூபாய் ஓவர் டியூவ் வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் ஆனந்தை தொடர்பு கொண்டு தினமும் இது தொடர்பாக கேட்டு நச்சரித்து உள்ளனர். சரியாக தவணை கட்டியும் ஓவர் டியூவ் ஏன் வந்தது கட்ட முடியாது என மறுத்து உள்ளார். சிபில் ஸ்கோர் குறையும் என ஆனந்தை எச்சரித்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலான அவர் நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை