19 போலீசாருக்கு ஒரே இரவில் டிரான்ஸ்பர்! | Perambur police | liquor Case
பெரம்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தது மற்றும் சாராய விற்பனையை தட்டி கேட்டது தொடர்பாக பிரச்னை வெடித்தது. பிப்ரவரி 14 இரவு சாராய வியாபாரிகளான ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் தங்கதுரை, மூவேந்தன் சேர்ந்து தினேஷ் என்பவரை தாக்க முற்பட்டனர். இதை தடுத்த முட்டம் ஹரிஷ், சீனிவாசபுரத்தை சேர்ந்த ஹரி சக்தி ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். பெரம்பூர் போலீசார் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து எஸ்பி. தனிப்பிரிவு போலீஸ் பிரபாகர், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.