உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓசி பெட்ரோல் தராததால் பெண் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர்

ஓசி பெட்ரோல் தராததால் பெண் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவர் திமுக பிரமுகர் சீனு. பண்ருட்டி நகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் அண்ணன். இவர், கும்பகோணம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், பைக்கிற்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை பிறகு தருவதாக கூறி சென்றார். 2 நாள் கழித்து மீண்டும் வந்த சீனு, 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கூறியுள்ளார். ஏற்கனவே தரவேண்டிய 100 ரூபாயை தரும்படி, பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் கேட்டு இருக்கிறார். ஆத்திரம் அடைந்த சீனு, பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அவரது சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பெண் ஊழியரை தாக்குவதை பார்த்த சக ஊழியர்கள் சென்று அவரை காப்பாற்றினர். பங்க்கின் பெண் ஊழியர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கவுன்சிலரின் அண்ணன் சீனு கைது செய்யப்பட்டார்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை