சேலம் நோக்கி வந்த விமானம் ரோட்டில் இறங்கியது ஏன்? பரபரப்பு தகவல் | Pilot emergency landing |
சேலம் ஓமலூரில் தனியார் விமான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து செஸ்னா என்கிற சிறிய விமானம் பயிற்சிக்கு கிளம்பியது. பைலட் ராகுல், பயிற்சி மாணவன் ஹாசிர் அதில் பயணம் செய்தனர். சேலத்தில் இருந்து காரைக்குடி சென்றுவிட்டு மீண்டும் சேலம் திரும்பினர். வழியில் புதுக்கோட்டை, நார்த்தாமலை பகுதியில் விமானம் கோளாறானது. பயிற்சி விமானம் ஒற்றை இஞ்ஜின் கொண்டது என்பதால் மேற்கொண்டு இயக்குவது ஆபத்து என்பதை பைலட் ராகுல் உணர்ந்தார். அங்கிருந்து திருச்சி ஏர்போர்ட் 50 கிலோமீட்டருக்குள் தான் இருந்தது. ஆனால் அதுவரை பயணிக்க முடியாத நிலை உருவானது. வேறு வழி இல்லாமல் ரோட்டில் தரையிறக்க பைலட் முடிவு செய்தார். அம்மா சத்திரம் கிராமத்தில் திருச்சி-காரைக்குடி ஹைவேயில் விமானம் தரையிறக்கப்பட்டது. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. விமானம் ரோட்டில் இறங்கிய வேகத்தில் முன்புற இஞ்ஜின் காற்றாடி உடைந்தது. பைலட் ராகுல், பயிற்சி மாணவர் ஹாசிர் பத்திரமாக வெளியே வந்தனர். அங்கே திரண்ட கிராமமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். நடு ரோட்டில் நின்ற விமானத்தை 150 அடி தூரம் தள்ளி ஓரமாக நிறுத்தினர். விமானம் ரோட்டில் இறங்கியதை அறிந்த சுற்றுவட்டார கிராமமக்களும் அங்கே திரண்டனர். உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். விமான இஞ்ஜினில் இருந்து எரிபொருள் கசிவு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி விமானத்துறை இயக்குனர் ராஜ்குமார் பார்வையிட்டார். பைலட் ராகுல் சாதுரியமாக செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இது போன்ற நேரங்களில் ரோட்டில் எமர்ஜென்ஸி லேண்ட் செய்வது வழக்கமான நடைமுறை. இருந்தாலும் விபத்து குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். விமானம் பயிற்சி நிறுவனம் முறையாக அனுமதி பெற்றுள்ளதா? விமானம் கிளம்பும் முன் பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது என தெரிவித்தார். #CessnaCrash #EmergencyLanding #PilotHero #AviationSafety #EkviAirTraining #TrichyHighway #SalemKaraikudi #PudukkottaiIncident #FlightTraining #AviationNews