பிரிக்ஸ் மாநாடுக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். கசான் நகர் ஏர்போர்ட்டில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏர்போர்ட்டில் இருந்து தங்கும் ஓட்டலுக்கு சென்றார் மோடி. அங்கு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்திய உடைகளை அணிந்து மூவர்ண கொடியை அசைத்தும் சமஸ்கிருத வரவேற்பு பாடல்கள் பாடியும் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இஸ்கான் உறுப்பினர்கள் பகவான் கிருஷ்ணரின் பஜனை பாடல்களை பாடி மோடியை வரவேற்றனர். அவர்களுடன் ரஷ்யர்களும் பஜனை பாடல்களை பாடினர். மோடி கைகளை கூப்பி பஜனையை ரசித்து கேட்டார். இந்திய பாரம்பரிய உடை அணிந்த ரஷ்ய கலைஞர்கள் ரஷ்யா மற்றும் இந்தியாவின் கர்பா நடனம் ஆடி வரவேற்பு அளித்தனர்.
அக் 22, 2024