/ தினமலர் டிவி
/ பொது
/ அன்புமணிக்கு எம்பி பதவி! காய் நகர்த்தும் பாமக | PMK | EPS | RamaDoss | Anbumani | ADMK
அன்புமணிக்கு எம்பி பதவி! காய் நகர்த்தும் பாமக | PMK | EPS | RamaDoss | Anbumani | ADMK
பாமக தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா எம்பி பதவி வரும் ஜூலை 24ல் முடிகிறது. இந்த சூழலில் சென்ற 17ம் தேதி சேலத்தில் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை ஜி.கே.மணி சந்தித்து பேசினார். உறவினர் இல்ல திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால் மகனை மீண்டும் எம்பியாக்க ராமதாஸ் அனுப்பிய துாதராகவே ஜி.கே.மணி பழனிசாமியை சந்தித்தார் என பாமக தரப்பில் கூறுகின்றனர். மணியிடம் மனம் விட்டு பேசிய பழனிசாமி, லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு வந்திருந்தால் குறைந்தபட்சம் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரத்தில் வென்றிருக்கலாம்.
பிப் 22, 2025