பாமக MLA-வை சுற்றி நின்று தாக்கிய திமுகவினர்-வீடியோ | PMK MLA Arul video | PMK vs DMK | Salem west
சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி அருகே பால குட்டப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட 2 கோடியே 18 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்கான பணியை சென்னையில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் முறையில் துவங்கி வைத்தார். இருப்பினும் இன்று முறைப்படி பூமி பூஜை மூலம் கட்டுமான பணிகள் துவங்கும் என்று கான்ட்ராக்டர்கள் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே பாமகவை சேர்ந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ஸ்பாட்டுக்கு வந்தார். சம்மந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் பூமி பூஜையை துவங்கி வைப்பதாக சொன்னார். அவர் ஊருக்குள் வந்ததுமே திமுகவினர் சுற்றுப்போட்டனர். ‛அமைச்சர் தான் பூமி பூஜை போடுவார். உங்களை விடமாட்டோம் என்று கூச்சலிட்டனர். ஒரு கட்டத்தில் பாமக எம்எல்ஏ அருளை மொத்தமாக சேர்ந்து தள்ளி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.