ஸ்வச் பாரத் பற்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி Swachh Bharat| Modi| Swachh Bharat Abhiyan| BJP|
ஸ்வச் பாரத் பற்றி பிரதமர் மோடி நெகிழ்ச்சி Swachh Bharat| Modi| Swachh Bharat Abhiyan| BJP| காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் துாவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். துாய்மை இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவையொட்டி, டில்லி நவயுகா பள்ளி மாணவர்களுடன் பன்டாரா பார்க்கை சுத்தம் செய்தார். அப்போது துாய்மையின் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர்களும் மோடியிடம் கலந்துரையாடினர். அவரிடம் கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை தெரிந்து கொண்டனர். பின், அமைச்சர்கள், அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் துாய்மை இந்தியா திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசினார்.