சிறுமி பாலியல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு | Pocso act | Supreme court
போக்சோ வழக்குகளை ரத்து செய்யவே முடியாது! சமரசம் ஏற்பட்டாலும் விசாரணை தொடரும் Desc: ராஜஸ்தானில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. ஆனால், அந்த ஆசிரியருக்கும், சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. தம் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் ஆசிரியர் முறையிட்டார். கோர்ட்டும் அதை ஏற்று ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்பில்லாத ஒருவர், ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தொடர்பு இல்லாத 3வது நபர் மேல்முறையீடு செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியது.