உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடிப்பீங்களா? அடிங்க! போலீசிடம் எகிறிய காட்சி | Police | POCSO

அடிப்பீங்களா? அடிங்க! போலீசிடம் எகிறிய காட்சி | Police | POCSO

திண்டுக்கல் கிழக்கு ரத வீதியை சேர்ந்தவர் பரமசிவம். வயது 55. கவரிங் கடை வைத்துள்ளார். 2023ல் இவரது கடையில் பணிபுரிந்த 16 வயது சிறுமி கர்ப்பமானார். காதலனால் கர்ப்பமானேன் என ஆஸ்பிடலில் கூறி கருக்கலைப்பு செய்தார். இது குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்பிடலில் அவர் பொய் சொன்னது தெரியவந்தது. சிறுமி வேறு யாருடனும் பழகவில்லை. கவரிங் கடை உரிமையாளர் பரமசிவம் தான் அத்துமீறி உள்ளார். இதனை மறைக்க சிறுமி ஆஸ்பிடலில் பொய் சொல்லி இருக்கிறார். இதையடுத்து பரமசிவம் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டது.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ