/ தினமலர் டிவி
/ பொது
/ சாலை அமைத்து தர மறியலில் ஈடுபட்ட மக்கள்! Pondicherry | Mannadippattu | Road Roko
சாலை அமைத்து தர மறியலில் ஈடுபட்ட மக்கள்! Pondicherry | Mannadippattu | Road Roko
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு அருகே உள்ள கொடாத்தூரில் சாலை அமைத்து 20 ஆண்டுகள் ஆகிறது. அதனை பராமரிக்காததால் ஒவ்வொரு மழையின் போதும் மக்கள் கடுமையான சகதியை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தற்போது பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் கிராம மக்கள் விழுப்புரம் - புதுச்சேரி சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். கொடாத்தூரில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. சமுதாய நலக்கூடம், விவசாய நெல் களம் ஆகியவை பாழடைந்துள்ளது. அதனையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
அக் 16, 2024