/ தினமலர் டிவி
/ பொது
/ யாருக்கும் பயனில்லாமல் போகும் இலவச திட்டம் | Pongal | Free saris dhotis | TN Govt
யாருக்கும் பயனில்லாமல் போகும் இலவச திட்டம் | Pongal | Free saris dhotis | TN Govt
இலவச வேஷ்டி, சேலைகள் மூட்டை மூட்டையாக வேஸ்ட்! கார் ஷெட்டில் வைத்து வீணாக்கிய அவலம் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு இலவசமாக வேஷ்டி, சேலை வழங்கி வருகிறது. இதன் மூலம், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டி சேலைகள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. அவை பயனாளிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. வழங்கப்படாமல் மிச்சமான வேஷ்டி சேலைகள், திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள கார் ஷெட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்துள்ளனர்.
டிச 09, 2024