ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு | Pongal gift | TN govt announced | Ratio
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ல் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் விரிவடைந்து வருகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு என்ன பரிசு தொகுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வந்தது. இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும்.