/ தினமலர் டிவி
/ பொது
/ விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்! | Pothigai Express train | Chennai train
விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்! | Pothigai Express train | Chennai train
நேற்று மாலை செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. கடையநல்லூரின் போகநல்லூர் பகுதியில் வந்த போது தண்டவாளத்தின் நடுவே 2 பெரிய கல் இருப்பது தெரிந்தது. உஷாரான ரயிலின் லோகோ பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினார். சுமார் 10 கிலோ எடை கொண்ட கல்லை அப்புறப்படுத்தி ரயில் கிளம்பியது. முன்பே கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தண்டவாளத்தில் கற்கள் வைத்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
நவ 01, 2024