போர்களை நிறுத்த மோடி போடும் ஸ்கெட்ச்! | Modi Speech | 19th Utchi conference | Laos
லாவோஸில் நடந்த கிழக்கு ஆசிய நாடுகளின் 19வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் போர், வளரும் நாடுகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும். பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது. நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்தவன். இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அனைவரும் மதிப்பு அளிக்க வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் கடுமையான சவாலாக இருக்கிறது. அதை எதிர்கொள்ள, மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனாவை தாக்கிய யாகி என்ற வெப்பமண்டல சூறாவளியால் பலியான மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மியான்மரின் நிலைமைக்கு ஆசியான் அணுகுமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், மனிதாபிமான உதவியைப் பேணுவது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம் என பிரதமர் மோடி பேசினார். உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - ஹமாஸ் போர்களை நிறுத்தவும், அமைதியை மீட்டெடுக்கவும் பிரதமர் மோடி நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.