வயநாடு மக்களுக்கு பிரியங்கா அளித்த உறுதி Priyanka first visit to Wayanad| Congress MP Priyanka at
கேரளாவின் வயநாடு லோக்சபா இடைத் தேர்தலில் 4 லட்சத்துக்கு அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்ற பிரியங்கா, நேற்று முன்தினம் எம்பியாக பதவியேற்றார். வெற்றிக்கு பிறகு முதல் முறையாக வயநாட்டுக்கு அவர் சென்றார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் அண்ணனுமான ராகுலுடன் கோழிக்கோடு ஏர்போர்ட் வந்த பிரியங்காவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல், பிரியங்கா உரையாற்றினர். காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். கூட்டத்திற்கு வந்திருந்த சிறுவர்களை மேடைக்கு அழைத்து தன் மடியில் அமர்த்தி ராகுல் கொஞ்சி மகிழ்ந்தார். அவர்களுக்கு சாக்லெட் பரிசளித்தார்.