/ தினமலர் டிவி
/ பொது
/ ஐரோப்பா Satellite! இந்தியாவின் ராக்கெட்: மெகா திட்டம் | Proba-3 Mission | Parallel Satellite Pair
ஐரோப்பா Satellite! இந்தியாவின் ராக்கெட்: மெகா திட்டம் | Proba-3 Mission | Parallel Satellite Pair
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இணை செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. டிசம்பர் 4ல் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. புரோபா-3(Proba) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் சூரியனின் ஒளிவட்ட பகுதி ஆய்வு செய்யப்பட உள்ளது. உலகில் முதல் முறையாக விண்ணில் ஏவப்படும் இணை செயற்கைகோள் இதுவாகும். ஒரே செயற்கைகோளில் எல்லா ஆய்வு கருவிகளையும் ஏற்றி சுமையை அதிகரிப்பதுக்கு பதிலாக மேம்பட்ட திறனை அடையும் வகையில் இரண்டு செயற்கைகோளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றில் கரோனாகிராப் என்கிற சூரியனை ஆய்வு செய்யும் கருவியும், இன்னொரு செயற்கைகோளில் Occulter எனப்படும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
நவ 26, 2024