/ தினமலர் டிவி
/ பொது
/ கட்டமைப்புகளை மேம்படுத்த உதயமாகும் பூரி மாநகராட்சி Puri Jaganath Rath Yatra Concludes | Bahuda Yatra
கட்டமைப்புகளை மேம்படுத்த உதயமாகும் பூரி மாநகராட்சி Puri Jaganath Rath Yatra Concludes | Bahuda Yatra
பூரி கோயில் திரும்பிய ஜெகன்நாதர் பஹுதா யாத்திரை கோலாகலம் 9 நாள் ரத யாத்திரை நிறைவு ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடக்கும் ரத யாத்திரை உற்சவம் ஜூன் 27ல் விமரிசையாக துவங்கியது. மூலவர்களான ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்ரர், சகோதரி சுபத்திரைக்காக பிரத்யேகமாக மூன்று பிரமாண்ட மரத்தேர் செய்யப்பட்டன. ரத யாத்திரைக்கு முன் நடக்கும் வழக்கமான சாந்தி பூஜைகள், புனித நீராட்டல்களுக்கு பின், மூன்று உற்சவர்களும் ரதத்தில் ஏறினர். பூரி ஜெகன்நாதர் கோயிலில் இருந்து சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள குந்திசா கோயிலுக்கு சென்று மூவரும் ஓய்வெடுத்தனர்.
ஜூலை 05, 2025