புடின் மனமாற்றம் பின்னால் மோடி அஸ்திரம் Putin on Modi | Russia vs Ukraine | Putin ready to end war
மோடி செஞ்ச தரமான சம்பவம் டோட்டலா மனம் மாறிய புடின்! உக்ரைன் போர் END? உக்ரைன் மீது 2022 பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. சில வாரங்களில் போர் முடிந்து விடும் என்று ரஷ்யா நினைத்தது. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் துணையோடு உக்ரைன் திருப்பி அடிக்க துவங்கியதால் போர் முடிவுக்கு வரவில்லை. இரண்டரை ஆண்டுகளாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டு வர ஆரம்பத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அப்போது நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு உக்ரைன், ரஷ்யா நாடுகள் ஒப்பந்தம் போட்டன. ஆனால் அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தான் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க துவங்கியது. பிரதமர் மோடி இதற்காக முழு வீச்சில் களம் இறங்கினார். ரஷ்யாவுக்கு சென்று போரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை புடினிடம் எடுத்துரைத்தார். போரை விட அமைதி பேச்சு தான் நிரந்தர தீர்வை தரும் என்று புடினிடம் நேரடியாக வலியுறுத்தினார். கையோடு போர் நடக்கும் உக்ரைனுக்கும் போனார் மோடி. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சென்று போர் பாதிப்புகளை பார்வையிட்டார். அவரிடமும் போரை நிறுத்தி விட்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்துவது பற்றி மோடி பேசினார். மோடியின் முயற்சியை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் பாராட்டின. உலக நாடுகளும் மோடியை வியப்புடன் பார்த்தன.