தென்காசியில் பல ஆண்டாக சிகிச்சை அளித்த போலி டாக்டர்| quack arrested, Tenkasi hospital
தென்காசி மாவட்டசுகாதாரத்துறை அதிகாரிகள் பிரேமலதா, ஜெஸ்லின் பன்பொழியில் செயல்பட்டு வரும் சூர்யா ஆஸ்பிடலில் சோதனை நடத்தினர். கேரளாவைச் சேர்ந்த அமிர்த லால் என்பவர் ஆஸ்பிடலை நடத்தி வருவது தெரிய வந்தது. 12ம் வகுப்பு மட்டுமே படித்த அமிர்தலால் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். உள்நோயாளியாகவும் மக்கள் அட்மிட் ஆகி அவரிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை கண்டுபிடித்தனர். ஆஸ்பிடலி்ல இருந்த குளுக்கோஸ் பாட்டில்கள், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். ஆஸ்பிடல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. போலி டாக்டர் அமிர்தலாலை அச்சன்புதூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.