உதயநிதிக்கு நாள் குறித்த அறிவாலயம் | Rajakannappan | Udhayanidhi
முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக அமைச்சர்கள் விரும்புகின்றனர். இதன் வெளிப்பாடாக அவ்வப்போது தங்களது ஆசைகளை வெளிப்படுத்தி வந்தனர். இப்போதே துண்டு போடுறாங்க என உதயநிதியே ஒருமுறை சொல்லி இருந்தார். கிட்டத்தட்ட உதயநிதி துணை முதல்வராவது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஸ்டாலினிடம் இது பற்றி கேட்கப்பட்டது. உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால் பழுக்கவில்லை என ஸ்டாலின் சூசகமாக பதில் சொன்னார். அவர் சொல்லி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உதயநிதி பழுத்துவிட்டது போல தெரிகிறது. ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் இந்த ரகசியத்தை உடைத்துள்ளார். மாணவர்கள் மத்தியில் பேசும்போது துணை முதல்வர் உதயநிதி என சொல்லிவிட்டு அடுத்த நொடியே மாற்றி பேசினார். சாரி, ஆகஸ்ட் 19க்கு பிறகுதான் துணை முதல்வராவார். அதற்கு முன்னாடி அப்படி சொல்லக்கூடாது என சமாளித்தார்.