ரஜினி உடல் நிலை ஓகே; எப்போது டிஸ்சார்ஜ்? | Rajinikanth | PM Modi | Latha Rajinikanth
ஸ்டென்ட் பொருத்தி ரஜினிக்கு சிகிச்சை! உடல்நிலை குறித்து கேட்டறிந்த மோடி Desc: ரஜினி உடல் நிலை ஒகே எப்போது டிஸ்சார்ஜ் Rajnikanth treatment| modi| நடிகர் ரஜினி ரத்தநாள வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அட்மிட் செய்யப்பட்டார். ரத்தநாள வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதயத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் அயோடா தமனி, வயிற்றுப் பகுதியில் வீங்கி இருந்தது. இதை அறுவை சிகிச்சை செய்யாமல் டிரான்ஸ்கதீட்டர் மூலம் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. அதாவது, தொடையில் சிறு துவாரத்தின் வழியாக ஒயர் போன்ற கருவி செலுத்தப்படும் அது, ரத்த நாளத்துக்குள் ஊடுருவி வீக்கம் உள்ள பகுதிக்கு செல்லும். அக்கருவியில் உள்ள வலைப்பின்னல் போன்ற ஸ்டென்ட், பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தப்படும். இதனால், வீக்கமடைந்த பகுதிக்கு தேவையில்லாமல் ரத்தம் செல்வது தடுக்கப்படும். ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பின், ரஜினி உடல்நிலை சீராக இருப்பதாகவும் 2 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை தெரிவித்தது. ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து மனைவி லதாவிடம் டெலிபோனில் பிரதமர் மோடி கேட்டு அறிந்தார்.