உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜ்யசபாவில் அனல் பரப்பிய வினேஷ் போகத் விவகாரம்

ராஜ்யசபாவில் அனல் பரப்பிய வினேஷ் போகத் விவகாரம்

ஒலிம்பிக் மல்யுத்தம் ப்ரீ ஸ்டைல் பிரிவில் பைனலுக்கு முன், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டார். இந்த விவகாரம் பற்றி விவாதிக்கவும் எதிர்கட்சி எம்பிக்கள் குரல் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், சபைத்தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி தரவில்லை. தன்கர் கூறும்போது, வினேஷ் தகுதிநீக்க விஷயத்தில் எதிர்கட்சிகள் தங்களுக்கு மட்டுமே வருத்தம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர், நான் உட்பட இந்த தேசமே அதன் வலியை உணர்கிறது. இதை அரசியல் ஆக்குவது அந்த பெண்ணுக்கு செய்யும் அவமரியாதை. அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை