உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்பா ராமதாசுக்கு மகன் அன்புமணி சொன்ன மெசேஜ் ramadoss| pmk| anbumani

அப்பா ராமதாசுக்கு மகன் அன்புமணி சொன்ன மெசேஜ் ramadoss| pmk| anbumani

தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பனிப்போர் நீடிக்கிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், இனி நானே தலைவர் என அறிவித்தார். அன்புமணி செயல்தலைவராக இருப்பார் என்றார். இந்த நிலையில், ராமதாசுக்கு புகழ் சேர்க்கும் விதமாக, பாமகவை நானே வழி நடத்துவேன் என்று அன்புமணி பதில் கூறியுள்ளார். அவரது அறிக்கை: பாமக கொள்கை விதிப்படி கட்சி தலைவரை பொதுக்குழு உறுப்பினர்கள் கூடியே தேர்ந்தெடுக்க முடியும். அப்படித்தான் 2022ல் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். கட்சி தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து இருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சி தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக பாமகவை ராமதாஸ் தொடங்கினாரோ அதே நோக்கத்தை நோக்கி இன்னும் தீவிரமாக பயனிக்க உறுதி பூண்டுள்ளேன். சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதும், சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதும் நம் முன் உள்ள இலக்குகள். 2026 தேர்தல் கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது கடமை என்று அன்புமணி கூறியுள்ளார்.

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை