உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை முன்னாள் அதிபர் ரணில் எடுத்த திடீர் முடிவு Ranil Wickremasinghe announces retirement from ele

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் எடுத்த திடீர் முடிவு Ranil Wickremasinghe announces retirement from ele

இலங்கையின் கொழும்பு நகரில் 1949ல் பிறந்தவர் ரணில் விக்ரமசிங்கே. சிலோன் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தார். 1972ல் அரசியல் பயணத்தை துவங்கிய அவர், 1977ல் முதல் முறையாக இலங்கை பார்லிமென்ட் உறுப்பினரானார். மெல்ல மெல்ல அரசியலில் வளர்ந்த ரணில், ராணுவம், நிதி, கல்வி, பெண்கள் நலன், இளைஞர் நலன், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். இலங்கை பார்லிமென்ட்டின் எதிர்க்கட்சித் தலைவர், 1993, 2001, 2015, 2018, 2022ம் ஆண்டுகளில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதுடன் பல்வேறு முக்கிய இலாகாக்களையும் கையாண்டார். பண்டாரநாய்க்கே, பிரேமதாசா, ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா, காமினி திசநாயகே, மைத்ரபாலா சிரிசேனா, மகிந்த ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் பணியாற்றிய அனுபவம் ரணிலுக்கு உண்டு.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை