உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஞ்சா போதையில் கொடூரம்: ஆற்காட்டை உலுக்கிய சம்பவம் | Ranipet | Arcot | Crime News

கஞ்சா போதையில் கொடூரம்: ஆற்காட்டை உலுக்கிய சம்பவம் | Ranipet | Arcot | Crime News

மிளகாய் பொடி தூவி பட்டப்பகலில் பயங்கரம்! இளைஞரை விரட்டி விரட்டி பழிதீர்த்த ஆசாமி! ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். வயது 30. இவருக்கும் ஆற்காடு கொல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளார். இந்த ஆத்திரத்தில் இருந்த கார்த்தி, இன்று ஆற்காடு பஸ் நிலையம் அருகே மணிகண்டன் நடத்தி வரும் ஆட்டோ கன்சல்டிங் கடைக்கு பைக் வாங்குவது போல கஞ்சா போதையில் சென்றுள்ளார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மறைத்து கொண்டு வந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவினார். பின்னர், கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார். வலியால் துடித்த மணிகண்டன், ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் தப்பி ஓடினார். இருப்பினும், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று மணிகண்டனை கத்தியால் வெட்டினார். பின்னர், ஒரு கடையில் தஞ்சம் அடைந்த மணிகண்டனை ஆற்காடு நகர போலீசார் மீட்டனர். கை, கால் மற்றும் தலையில் பலத்தை வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில், ரத்தினகிரியில் உள்ள மருத்துவமனையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆற்காடு போலீசார், கார்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்

ஜூலை 29, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஊர்குருவி
ஜூலை 31, 2026 20:43

இன்னும் கஞ்சா ஒழிந்தபாடில்லை.சிங்கப்பூர் மாதிரி ஒரு அளவுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருந்தால் மரண தண்டனை சட்டம் இயற்றவேண்டும் .


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி