/ தினமலர் டிவி
/ பொது
/ ஏரியில் மண் அள்ளிய லாரியை மடக்கி பிடித்த மக்கள் | Ranipet | Sand Mafias | Sand Theft
ஏரியில் மண் அள்ளிய லாரியை மடக்கி பிடித்த மக்கள் | Ranipet | Sand Mafias | Sand Theft
ராணிப்பேட்டை வாலாஜா அருகே வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் ஏரியில் மண் திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது. இன்று காலை அங்கு சென்ற ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். லாரிகளை மடக்கி மக்கள் கேள்வி எழுப்பினர். உரிய பதில் இல்லை. சம்பவத்தை வீடியோ எடுக்க துவங்கியதும் மண் அள்ளிய கூட்டம் அவசர அவசரமாக ஓட்டம் பிடிக்க துவங்கியது. அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. சட்ட விரோதமாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆக 06, 2024