உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை | Ranya Rao | Gold Smuggling Case

தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை | Ranya Rao | Gold Smuggling Case

இவர் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார் என்கிற குற்றம் உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை இவர் விமானத்தில் கடத்தியதி விசாரணையில் தெரியவந்தது. நகைகளை கடத்துவதற்கு கர்நாடக போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார். வருமானவரி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு தொடர்ந்தன. பலமுறை தனது ஜாமினுக்காக விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டன. இந்த சூழலில் மோசடி பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி காபிபோசா சட்டமும் இவர் மீது இப்போது பாய்ந்துள்ளது. அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ரன்யாவிற்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், தண்டனைக் காலம் முழுதும் ஜாமின் கோர முடியாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி