விடை பெற்றார் இந்தியாவின் தொழில் சக்கரவர்த்தி | Ratan Tata's Last Rites | Ratan Tata | Ratan Tata Fu
பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, வயது 86. கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நேற்று நள்ளிரவு அவர் உயிர் பிரிந்தது. இன்று காலை அவரது உடல் மும்பை என்.சி.பி.ஏ. அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். மகாராஷ்டிராவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. மாலை இறுதி சடங்குகளுக்காக வொர்லி மயானத்துக்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. முழு மாநில அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், டாடா குழுமத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். துப்பாக்கி குண்டுகள் முழங்க ரத்தன் டாடா உடல் அடக்கம் செய்யப்பட்டது.