உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலெக்டர், போலீஸ் கமிஷனர் விளக்கம் தர உத்தரவு | RCB celebration | Siddaramaiyah| bengaluru |

கலெக்டர், போலீஸ் கமிஷனர் விளக்கம் தர உத்தரவு | RCB celebration | Siddaramaiyah| bengaluru |

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றது. விராட் கோஹ்லி உட்பட RCB அணி வீரர்களை நேரில் காணும் ஆவலில் ரசிகர்கள் ஸ்டேடியம் முன் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. பெங்களூரு கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

ஜூன் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி