ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பு | Repo rate | 9th time unchanged | RBI Governor
இந்த முறையும் மாறாத ரெப்போ வட்டி விகிதம்! யாருக்கு லாபம்? மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதம் என்கிறோம். 2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். 2023 பிப்ரவரி முதல் இந்த ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில், ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிப்பதாக கூறினார். பொருளாதாரம், நிதிச் சூழல்களைக் கணக்கில் கொண்டே ரெப்போ வட்டி விகிதம் அதே விகிதத்தில் தொடர்கிறது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளன. அமெரிக்க பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் 4.8 சதவீதமாக நிலையாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2024-25ம் நிதி ஆண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆகவும், முதல் காலாண்டில் 7.1%, 2வது காலாண்டில் 7.2%, 3வது காலாண்டில் 7.3%, 4வது காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும். 2025-26ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி. 7.2%ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறினார்.