உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓய்வை நான் முடிவு செய்வது இல்லை: தோனி சொன்ன காரணம்

ஓய்வை நான் முடிவு செய்வது இல்லை: தோனி சொன்ன காரணம்

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியுடன் வீழ்ந்ததில் இருந்து, தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் பரவி வருகின்றன. இந்த போட்டியில் தோனியின் பேட்டிங் ரசிகர்களை திருப்திபடுத்தாததும், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9வது இடத்தில் பேட்டிங் செய்ய இறங்கியதும் விமர்சிக்கப்பட்டது. அத்துடன், ஐபிஎல் ஓய்வு குறித்த யூகங்கள் எழவும் முக்கிய காரணங்களாக இருந்தன. சென்னையில் நடந்த ஆட்டத்தை பார்க்க முதல்முறையாக தோனியின் பெற்றோர் வந்ததும் ஓய்வு வதந்திகள் பரவ காரணமாக இருந்தன. இது குறித்த கேள்விக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மகேந்திரசிங் தோனி பதில் அளித்தார். இப்போதைக்கு ஓய்வு இல்லை. இன்னும் ஐபிஎல் விளையாடி கொண்டுதானே இருக்கிறேன். எனக்கு வயது 43. இந்த ஐபிஎல் சீசன் முடியும் போது, ஜூலையில் 44 வயது இருக்கும். அதன் பிறகு விளையாடுவதா, இல்லையா? என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் அவகாசம் உள்ளது. ஆனால், அதை நான் முடிவு செய்வதில்லை. என் உடல்தான் முடிவு செய்கிறது. இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதன் பிறகு பார்ப்போம் என தோனி தெரிவித்தார்.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி