உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மணமகன் வீட்டாருக்கு ஜாமின் வழங்ககூடாது என ரிதன்யா தரப்பினர் வாதம்! Rithanya | Avinash Case

மணமகன் வீட்டாருக்கு ஜாமின் வழங்ககூடாது என ரிதன்யா தரப்பினர் வாதம்! Rithanya | Avinash Case

ரிதன்யா வழக்கில் அரசியல் தலையீடு! வக்கீல் பரபரப்பு புகார்! திருப்பூர் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் ரிதன்யா. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமாருக்கும் 3 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டார் மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்துவதாக கூறி ரிதன்யா தனது அப்பாவுக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். பின்னர் காரில் இருந்தபடி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவின்குமார், அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. ரிதன்யா தரப்பினர் ஜாமின் வழங்க கூடாது என்று கோரியுள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான கவின்குமார் தாய் சித்ராதேவியை போலீசார் விடுவித்தாக கூறப்படுகிறது. அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டுமென ரிதன்யா தரப்பினர் வலியுறுத்தினர். இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதால், விசாரணை தாமதமாக நடப்பதாக ரிதன்யா தரப்பு வக்கீல் மோகன்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

ஜூலை 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kumararaja Theivasigamani
ஜூலை 05, 2025 21:01

ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக சட்டங்கள் இது அறம் வளர்த்த மண் இப்ப அறம் தவறிய ஆட்சியாளர்கள் அறம் நின்று கொல்லும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை