பல்கலைக்கழக விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் அதிகாரம்
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரசு முறையிட்டது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட கோரியது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்து அனுப்பிய 10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறியது. அத்துடன் 10 மசோதக்களுக்கு சிறப்பு அதிகரத்தில் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. அந்த மசோதாக்களில் முக்கியமானது தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை கவர்னர் மூலம் நியமனம் செய்யாமல், மாநில அரசே நியமிப்பதற்கு வழிவகை செய்கிறது இந்த மசோதா. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் கவர்னர்தான், இதுநாள்வரை துணை வேந்தர்களை நியமனம் செய்து வருகிறார்.