/ தினமலர் டிவி
/ பொது
/ பலத்த மழைக்கிடையே சாலை போட்டதால் மக்கள் ஷாக் Road construction work tiruttani heavy rain tiruvallur
பலத்த மழைக்கிடையே சாலை போட்டதால் மக்கள் ஷாக் Road construction work tiruttani heavy rain tiruvallur
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரூ.30 லட்சத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருத்தணி பை-பாஸ் ரவுண்டானா பகுதியில் சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை போன்ற இடங்களில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடந்தபோது, திருத்தணி மற்றும் சுற்று வட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மழை பெய்தது. ஆனாலும் மழை பெய்து கொண்டிருக்கும்போதே, தார்சாலை போடும் பணியை நிறுத்தாமல் செய்தார்கள்.
ஆக 11, 2024