உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையை 35 ஆண்டு கலக்கிய ரவுடி நாகேந்திரன் உடல் அடக்கம் rowdy nagendran funeral body buried

சென்னையை 35 ஆண்டு கலக்கிய ரவுடி நாகேந்திரன் உடல் அடக்கம் rowdy nagendran funeral body buried

வடசென்னையை கிட்டத்தட்ட 35 ஆண்டாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பிரபல ரவுடி நாகேந்திரன். சிறையில் இருந்தபடியே பல ஆண்டாக வடசென்னையை பல சமயங்களில் அதிர வைத்தார். இதனால், ரவுடிகள் வட்டாரத்தில் நாகேந்திரன் மிகவும் பிரபலம். கொலை வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு கடந்த 9ம்தேதி மரணம் அடைந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி விசாலாட்சி கோர்ட்டில் வழக்கு போட்டதால் உடலை வீட்டுக்கு கொண்டு போவதில் தாமதம் ஏற்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி, ஸ்டான்லி முன்னாள் முதல்வர் தலைமையிலான மருத்துவக்குழு பிரேத பரிசோதனை செய்தது. அதை போலீஸ் தரப்பு வீடியோவில் பதிவு செய்தது. இறந்து 4 வது நாளான இன்று அவரது உடல் மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள நாகேந்திரன் வீட்டுக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டது. மனைவி விசாலாட்சி, மகன்கள் அஸ்வத்தாமன், அஜித் ராஜ், மகள் ஷாலினி உள்ளிட்டகுடும்பத்தினரும் உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நீண்ட நாளாக காதலித்த ஷரினாவை அப்பாவின் உடல் முன் நின்று இளைய மகன் அஜித் ராஜ் திருமணம் செய்தார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஒரு கிமீ தூரத்தில் உள்ள வியாசர்பாடி இடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி வியாசர்பாடி பகுதி மக்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கண்ணும் கருத்துமாக செயல்பட்டனர். நாகேந்திரன் வீடு முதல் இடுகாடு வரை எங்கும் போலீஸ்மயம்தான். ஒரு இணை ஆணையர், 3 துணை கமிஷனர்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் இன்றி இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஊர்வலம் சென்ற சாலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வியாசர்பாடி, பெரம்பூர் அதை ஒட்டிய பகுதிகளில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரவுடி நாகேந்திரன் மீது 5 கொலை, 12 கொலை முயற்சி, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 26 கிரிமினல் வழக்குகள் உள்ளது. கடைசியாக அவர் மீது போடப்பட்ட வழக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்புடையது. நிலப்பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களில் ஏற்பட்ட மோதலால் சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தார் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் முதல் அக்கியூஸ்டாகசேர்க்கப்பட்டிருந்தார். அவரது மூத்த மகன் அஸ்வத்தாமன் 3வது அக்கியூஸ்டாக சேர்க்கப்பட்டு, புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பா உடல்முன் திருமணம் செய்த இளைய மகன் அஜித் ராஜ் இன்னொரு வழக்கில் வேலூர் சிறையில் இருந்தார். அப்பா இறுதிச்சடங்கில் பங்கேற்க இரு மகன்களும் நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் வெளியே வந்தனர். மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சி முன்னாள் நிர்வாகி. இளைய மகன் அஜித் ராஜ் பாஜ நிர்வாகி. நாகேந்திரனுக்கு ஒரே ஒரு மகள். அவர் பெயர் ஷாலினி. அவர் டாக்டராக உள்ளார். #RowdyNagendran #Funeral #Vyasarbadi #GraveYard #PoliceDeployment #AmstrongCase #Aswathaman #StanleyGovernmentHospital #Ajithraj #SharinaMarriage #DoctorShalini #TamilNadu #BreakingNews #CrimeNews #CommunityResponse #PublicSafety #LocalNews #Tribute #InvestigationUpdates

அக் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி