உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாண்டவமாடிய ரஷ்யா... உக்ரைனில் உச்சக்கட்ட பீதி | Russia vs Ukraine | Russia massive attack | Putin

தாண்டவமாடிய ரஷ்யா... உக்ரைனில் உச்சக்கட்ட பீதி | Russia vs Ukraine | Russia massive attack | Putin

உக்ரைனில் ரஷ்யா வெறியாட்டம் 3 மாதங்களில் நடக்காத சம்பவம்! புடின் கொந்தளிப்பது ஏன்? இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் இப்போது திடீரென தீவிரம் அடைந்து இருக்கிறது. உக்ரைன் மீது இன்று அதிகாலையில் கொடிய தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஆகஸ்ட்டுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான். முதலில், ரஷ்யாவில் இருந்து கொத்து கொத்தாக உக்ரைனை நோக்கி ட்ரோன்கள் பறந்தன. அந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக குண்டு மழை பொழிந்தன. அடுத்த சில வினாடிகளில் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியது. உக்ரைன் தலைநகர் kyiv, வடமேற்கில் உள்ள Volyn, தெற்கில் உள்ள Mykolaiv, தென்கிழக்கு நகரமான Zaporizhzhia, கருங்கடல் துறைமுக நகரான Odesa உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பாலிஸ்டிக், ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா வீசியது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை