உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சபரிமலை தேவசம்போர்டு விளக்கம் அளிக்க உத்தரவு sabarimala| actor dilipan| kerala high court

சபரிமலை தேவசம்போர்டு விளக்கம் அளிக்க உத்தரவு sabarimala| actor dilipan| kerala high court

மலையாள திரைப்பட நடிகர் திலீப், 2 தினங்களுக்கு முன்பு, சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு சென்றார். இரவில் ஹரிவராசனம் பாடும் நேரத்தில், வரிசையில் வந்த பக்தர்களை தடுக்கப்பட்டு, நடிகர் திலீப் மற்றும் அவருடன் வந்தவர்கள் முன்வரிசையில் நிறுத்தப்பட்டனர். ஹரிவராசனம் பாடல் முடியும் வரை அவர்கள் அங்கு நின்று ஐய்யப்பனை தரிசனம் செய்தனர். நடிகருக்கு முன்னுரிமை அளித்தது தொடர்பான செய்தி வெளியானதன் அடிப்படையில் கேரளா ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் விசாரித்தனர். பல மணிநேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்களை தடுத்து நிறுத்தி, நடிகர் திலீப்பும் அவருடன் வந்தவர்களும் தரிசனம் செய்ய வைத்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர். நடிகருக்கு அனுமதி வழங்கியது யார்? தனி நபர்கள் போலீஸ் பாதுகாப்புடன் எப்படி கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்? சபரிமலையில் என்ன நடக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு நடிகரால் பல மணிநேரம் வரிசையில் நின்றவர்கள் சுவாமியை சரிவர தரிசிக்க முடியவில்லை. இது தொடர்பாக, சபரிமலை நிர்வாக அதிகாரி, போலீஸ் தனி அதிகாரி, சன்னிதானம் தனி அதிகாரி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் இனிமேல் நடைபெறாது என்பதை தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை