புதுப்புது வாக்குறுதிகள்: காங்கிரஸ் எண்ணம் ஈடேறுமா? Sachin Pilot | Congress | Delhi Election
ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 15 ஆண்டுகள் டில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், 2013 டிசம்பரில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. புதுடில்லி தொகுதியில் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அபார வெற்றி பெற்று, முதல் முறையாக டில்லியில் ஆட்சி அமைத்தார். 2015 மற்றும் 2020 தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. 2024 எம்.பி. தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. ஆனாலும் டில்லியின் 7 எம்.பி. தொகுதியிலும் பாரதிய ஜனதா கட்சியே வெற்றி பெற்றது. இதனால் பிப்ரவரி 5ம்தேதி நடைபெற உள்ள டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன.