உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரசுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக பாஜ கண்டனம் Sam Pitroda| Congress| Rahul| Bjp

காங்கிரசுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக பாஜ கண்டனம் Sam Pitroda| Congress| Rahul| Bjp

காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா. முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். ராகுலுக்கு குருநாதர் போன்றவர். அவ்வப்போது இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வாடிக்கை. ஏற்கனவே இந்தியர்களின் நிறத்தை பற்றி விமர்சித்தது சர்ச்சையானது. இப்போது ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்தியா -சீன உறவு பற்றி பேசி புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். சீனாவிடம் இருந்து என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. அமெரிக்காவுக்கு எதிரியை வரையறுக்கும் பழக்கம் இருப்பதால், இந்த பிரச்னை பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுகிறது என பிட்ரோடா கூறினார். மோதல் போக்கை கைவிட்டு அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் அணுகுமுறை ஆரம்பத்தில் இருந்தே மேதலையே மையமாக கொண்டு இருக்கிறது. அந்த அணுகுமுறைதான் எதிரியை உருவாக்குகிறது. அதே சமயம் சில ஆதரவையும் உருவாக்குகிறது. இந்த மனநிலையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே சீனாவை எதிராக இந்தியா கருத்துவது நியாயமானதல்ல. சீனா மட்டுமல்ல மற்ற நாடுகளையும்தான். கட்டளையிடுவது, கட்டுப்படுத்தும் மனநிலையை கைவிட்டு, தகவல் தொடர்பை அதிகரிக்கவும் ஒத்துழைக்கவும், இணைந்து செயல்படவும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. நம்மை சுற்றி சீனா வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். மதிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை