உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்ட சவுக்கு சங்கர் | savukku shankar | Coimbatore Court

போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்ட சவுக்கு சங்கர் | savukku shankar | Coimbatore Court

போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை போலீசார் கைது செய்தனர். கோவை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கஞ்சா வழக்கு, பெண் வன்கொடுமை வழக்கு என தேனி, திருச்சி, சேலம், சென்னை போலீஸ் நிலையங்களில் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பாய்ந்தது. கடைசியாக கஞ்சா வழக்கில் குண்டாசிலும் அவரை போலீசார் கைது செய்தனர். இப்போது கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தனர்.

மே 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ