/ தினமலர் டிவி
/ பொது
/ விசாரணையை வேகமாக முடிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு! | Savukku Shankar | High Court
விசாரணையை வேகமாக முடிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு! | Savukku Shankar | High Court
துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் ஊழல் நடக்கிறது. அதன் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் உள்ளார் என யு டியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் ஆதாரங்களை வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில், சென்ற 24ம் தேதி அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியது. அவரின் தாயை மிரட்டி வீடு முழுதும் மனிதக்கழிவு மற்றும் கழிவு நீரை ஊற்றி சென்றது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
ஏப் 17, 2025