உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என்ன நடந்தது மாணவர்களுக்கு? வெளியான காட்சி | School Students | thanjavur

என்ன நடந்தது மாணவர்களுக்கு? வெளியான காட்சி | School Students | thanjavur

தஞ்சை ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டியில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த 5 மாணவர்கள் நான்காம் வகுப்பு படிக்கின்றனர். கடந்த அக்டோபர் 21ல் வகுப்புக்கு வந்த ஆசிரியைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 5 மாணவர்கள் வாயிலும் செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்தது. திடுக்கிட்ட அவர் சக மாணவர்களிடம் காரணம் கேட்டுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியை புனிதா வாயில் டேப் ஒட்டி விட்டார் என்றனர். இதனை செல்போனில் போட்டோ எடுத்த ஆசிரியை மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார். போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறியடித்து பள்ளிக்கு சென்றனர். தலைமை ஆசிரியை புனிதாவிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை