உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளி மாணவி பாலியல் சம்பவம்: PTA தலைவரிடம் தீவிர விசாரணை School girl Sexual Assault case 3 students

பள்ளி மாணவி பாலியல் சம்பவம்: PTA தலைவரிடம் தீவிர விசாரணை School girl Sexual Assault case 3 students

பள்ளி மாணவி பாலியல் சம்பவம்: PTA தலைவரிடம் தீவிர விசாரணை School girl Sexual Assault case 3 students Arrested pocso act salem attur police crime pta president jothi dmk சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மூவரும் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். கடந்த மாதம் 22ம்தேதி மாணவிக்கு தொந்தரவு நடந்துள்ளது. ஆனால், கடந்த 10ம்தேதிதான் குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க துவங்கினர். இந்த விவகாரம் தெரிந்திருந்தும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோதி கட்டப்பஞ்சாயத்து பேசி விஷயத்தை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறார் என பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். ஜோதி திமுக பிரமுகர். அவரது மனைவி முன்னாள் ஊராட்சித்தலைவர் ஆவார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையை வேகப்படுத்தினர். மாணவி பாலியல் சம்பவத்தை போலீசுக்கு தெரிவிக்காமல் மூடி மறைக்க முயன்றதாக, பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா ஆகியோரை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி