உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் பின்னால் திடுக் தகவல் | Rowdy seizing Raja encounter | Armstrong case

ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் பின்னால் திடுக் தகவல் | Rowdy seizing Raja encounter | Armstrong case

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிந்தனர். மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளிகள் திருவேங்கடம், ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 28 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் 25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா, ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர் ஆவார். சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவற்காக நீலாங்கரைக்கு அழைத்து சென்றனர். அக்கரை பக்கிங்காம் கால்வாய் அருகே சென்றபோது, போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டார். துப்பாக்கி குண்டுகள் போலீஸ் வாகனத்தை துளைத்தன.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை