அக்டோபர் 4 தான் ஸ்ட்ரிக்ட் ஆக கூறிய நீதிபதி | Senthil Balaji | DMK | Money Laundering Case
பணமோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளார் . இந்த சூழலில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் இன்று ஆஜரானார். நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்த தடயவியல் உதவி இயக்குனர் மணிவண்ணன் ஆஜராகவில்லை. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி அக்டோபர் 4ல் அவரை ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையையும் அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். வழக்கின் விசாரணையை அக்டோபர் 14க்கு ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.