சாட்சிகள் எத்தனை பேர்? பட்டியல் கேட்டது சுப்ரீம் கோர்ட் senthilbalaji| supreme court| dmk govt|
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மோலாக சிறையில் இருந்தார். அவரது ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமலாக்கத்துறை, அமைச்சர் பதவியில் இருப்பதை சுட்டிக்காட்டி, சாட்சிகளை கலைக்க கூடும் என வாதாடி வந்தது. இதனால், அமைச்சர் பதவியை செந்தில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு கடந்த செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்த உடனேயே அமைச்சராக பதவி ஏற்றார். இதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனது, விசாரணையை பாதிக்கும் என கூறியிருந்தார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜாமினை ரத்து செய்ய மறுத்தனர். அமலாக்க துறையை மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணை வந்தது. நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஜி மாசி அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் கூறும்போது, கடந்த முறை பதில் சொல்கிறோம் என தமிழக அரசு கூறியதால், நோட்டீஸ் அனுப்பவில்லை. தற்போது வரை அரசு பதில் அளிக்கவில்லை.