சேலத்தை உலுக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சியால் திடுக் | shocking cctv video
சேலம் மாவட்டம் வீராணம் அருகே ரோட்டில் நடந்த சென்ற பெண்ணை கீழே தள்ளி இளைஞர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் அன்னை சத்யா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். டிசர்ட், பேண்ட் போட்ட டிப்டாப் இளைஞன் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் பெண்ணை நோக்கி விறுவிறுவென ஆசாமி நடந்தான். அந்த பெண் ஒரு கணம் பயத்தில் உறைந்தார். தனக்கு ஏதோ நேரப்போகிறது என்பதை அறிந்து கூச்சலிட்டார். காப்பாத்துங்க... காப்பாத்துங்க... என்று அலறினார். இந்த சம்பவம் நடுரோட்டில் நடந்து கொண்டு இருந்தது. சுற்றிலும் வீடுகள் நிறைந்த இடம். பட்டப்பகல் நேரம். ஆனால் அந்த கொடூர ஆசாமி எதையும் பொருட்படுத்தவில்லை. பெண்ணின் கால்களை பிடித்து கீழே தள்ளினான். ரோட்டில் விழுந்த அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்தான். பலாத்காரம் செய்ய முயன்றான். பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு அன்னை சத்யா நகரே அதிர்ந்தது. பயந்து போன கொடூரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். குடியிருப்பு வாசிகள் கூடினர். அந்த பெண் மயங்கி விழுந்தார். பிறகு மீண்டும் எழும்பி தனக்கு நேர்ந்ததை குடியிருப்பு வாசிகளிடம் கூறினார்.